இவர் யார் என்று தெரிகிறதா!! மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.
சினிமா
இவர் யார் என்று தெரிகிறதா!! மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.
இவர் 2002ல் கலைமாமணி விருது பெற்றவர்.
1959-ம் ஆண்டு நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு அவர்கள் தான் இவர்.
டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது. 1965ல் கே.பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
பின்னர் சினிமாவில் சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா உள்ளிட்ட 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்த டைப்பிஸ்ட் கோபு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி தற்போதிருக்கும் விஜய், அஜித் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.
பின்னாளில் முதுமையும் வறுமையுமாக மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் சென்னை அம்பத்தூரில் வசித்துவந்தார். சில சினிமா நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்துவந்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உதவித் தொகை வழங்கப்பட்டுவந்தது.
50 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருந்தாலும் வறுமையில் தான் இவருடைய கடைசி காலம் கழிந்தது.
Prashantha Kumar






















