• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரிசூலம் வெற்றித் திரைப்படம் வெளியான நாள்.....

சினிமா

ஒரு இருநூறாவது படம் வெகு ஜனம் ரசிக்கும்படி எப்படி இருக்க வேண்டும் என நிரூபித்த ஜனரஞ்சகமான நடிகர் திலகத்தின் படம்தான் திரிசூலம் !

#ராஜசேகர் /ஜெயராஜ் -உணர்ச்சி கொந்தளிப்பின் ஊற்று #சங்கர் - அம்மாவிடம் வளரும் பாந்தமான மகன் #குரு - சேஷ்டைகளின் மொத்த உருவம் 

இந்த மூன்று வேடத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டி இருப்பார். மூன்று வேடங்களில் தோன்றும்போது மூன்றையும் வெவ்வேறு விதங்களில் நடித்துக் காட்டும் நடிகர் திலகத்திற்கு. மூன்று என்ன, முன்னூற்று எட்டு பாத்திரங்களைக் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், சளைக்காமல் சவாலை ஏற்பவராயிற்றே நடிகர் திலகம் !

இதில் ராஜசேகரன் கதாபாத்திரத்தில் கே ஆர் விஜயாவுடன் ஆன அந்த டெலிபோன் காட்சி ஒன்று போதுமே ‼️ புன்னகை அரசி மற்றும் நம் நடிகர் திலகம் ஜோடி காதல் பாடல்கள் அதிகம் உண்டு.

அந்த ஜோடியின் காதல் நெருக்கத்தை பார்த்த நாம் பாச உருக்கத்தையும் காண இந்த பாடல் ஒர் பதம். புன்னகை அரசி ஒரு குழந்தையை போல இரு கைகளாலும் ரிசீவரை தூக்கி வைத்திருப்பது அழகென்றால் நடிகர் திலகம் ஃபோனையும் ரிசீவரையும் நெஞ்சோடு அணைத்து வைத்து பேசும்போது பேரழகு ❤️👍🏻

இவர்கள் உருகும் காட்சியை (பாடல்) பார்த்து நம் மனமே போன்☎️ கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல்லுக்கே நன்றி சொல்லும்.🙏

இதுவரை வந்த தொலை பேசி திரைப்பட 🎥 காட்சிகளிலேயே சிறந்த ஒன்று இது என்று அறுதியிட்டு கூறலாம்! இக்காட்சிக்கு🎞️ உருகாதவர் 😥எக்காட்சிக்கும் உருகார் !!

எக்ஸ்டென்ட் ப்ளீஸ்" என்னும் நடிகர் திலகத்தின் மேம்படுத்தி (Improvisation) சொன்ன டெலிபோன் காட்சி டயலாக்., சங்கர் கதாபாத்திரத்தின் பாந்தமான நடிப்பு , குருவின் குடும்ப விளையாட்டுகள் காதல் சேட்டைகள் என அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் மனம் மகிழ்ந்து ரசித்த படம் திரிசூலம்

படம் திரைக்கு வந்த முதல்நாள் தொடங்கி சாதனைகள் படைக்க ஆரம்பித்தது. சென்னையில் 900 அரங்கு நிறைந்த காட்சிகள், மதுரையில் 400 க்கும் மேல் அரங்கு நிறைந்த காட்சிகள் என பட்டையை கிளப்பியது. 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 175 காட்சிகளுக்கு குறையாமல் அரங்கு நிறைந்தது இன்னொரு சாதனை. சென்னை உள்பட 11 திரையரங்குகளில் 175 நாள்களை கடந்து வெள்ளி விழா கண்டது. அதுவரை எந்தத் திரைப்படமும் 11 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டதில்லை.

அதேபோல் தமிழகத்தில் திரிசூலம் 3 கோடிகளைத் தாண்டி, வசூலித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் திரிசூலம் "பெற்றது.

திரிசூலம் வெற்றித் திரைப்படம் வெளியான நாள் 27/1/1979

- ஆறுமுகம் சிக்ஸ் ஃபேஸ்

Leave a Reply