பிரான்ஸின் பிரபல சுப்பர் மார்க்கெட் எடுத்த திடீர் முடிவு
பிரான்ஸின் பிரபல சுப்பர் மார்க்கெட் நிறுவனமான Auchan, எடுத்த திடீர் முடிவு அவர்களது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 91 கிளைகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் 15 நிலையங்கள் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவையாகும்.
இந்நிலையில் பல்பொருள் அங்காடிகளில் வடிவமைப்பையும், அதன் முழு செயல்திறனையும், போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க விரைவாக திட்டமிட்டுள்ளதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mousquetaires Group எனும் குழுமத்துக்கு இந்த கிளைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அவை தவிர்த்து, ஏனைய 164 கிளைகள் தொடர்ந்தும் Auchan கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
























