மக்கள் திலகம் எனும் மகா நடிகன் எம்.ஜி.ஆர். நேசன்
சினிமா
கடந்த இதழில் மக்கள் திலகத்தின் சண்டைத் திறனைப் பற்றி பார்க்கும்போது கத்திச் சண்டையில் அவரது பலவிதமான சண்டைக் காட்சிகளைப் பற்றி பார்த்த நாம் தொடர்ந்து அவரது ஈடு இணையற்ற பிற சண்டைக் காட்சிகளைப் பற்றியும் பார்ப்போம்.
படகோட்டி, தாலி பாக்கியம், விவசாயி, அன்னமிட்ட கை, தாயை காத்த தனயன் போன்ற படங்களில் கம்புச் சண்டை, தாய்க்கு தலை மகன் படத்தில் கடப்பாரைக் கொண்டு சண்டை, காஞ்சித் தலைவன் படத்தில் மல்யுத்தம், திருடாதே, தாழம்பூ போன்ற படங்ளில் தன்னை சுற்றி சூழ்ந்திருக்கும் 7, 8 நபர்களோடு ஆயுதமின்றி வெறும் கைகளால் சண்டை, காவல்காரனில் பாக்ஸிங், தேடிவந்த மாப்பிள்ளையில் பிளாஸ்டிக் கேனை கம்புப்போல் சுழற்றி சண்டையிடுவது, ரகசிய போலீஸ், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களில் ஜூடோ
பாணி சண்டை, மாட்டுக்கார வேலனில் இரண்டு கைகளில் இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு கம்பு போல் சுழற்றுவது மற்றும் மாட்டு கழுத்தில் இருக்கும் மணிகள் பொருந்திய பெல்டைக் கொண்டு கம்பு போல் சுழற்றி சண்டையிடுவது, உரிமைக்குரல் திரைப்படத்தில் குதிரை சாட்டையைக் கம்பு போல் சுழற்றி சண்டையிடுவது, ஒளிவிளக்கு திரைப்படத்தில் சிறிய பிச்சுவாக்கத்தியை வைத்துக் கொண்டு சண்டையிடுவது, ரிக்ஷாக்காரனில் ரிக்ஷாவில் அமர்ந்து ஒட்டிக் கொண்டே கம்பு சுழற்றுவது மற்றும்
மிகவும் அரிதான சுருள்வாள் சண்டை, உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் மான்கொம்பு சண்டை, சுற்றும் வாலிபன் படத்தில் ஸ்கேட்டிங் உலகம் செய்து கொண்டே சண்டையிடுவது, குலேபகாவலி தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் புலியோடு சண்டை, தாய்க்குப் பின் தாரம் படத்தில் காளையோடு சண்டை, அடிமைப் பெண் திரைப்படத்தில் சிங்கத்தோடு சண்டை மற்றும் வலையின் மீது ஈட்டி சண்டை இப்படி தனது திரைப்படங்களில் ஒரே மாதிரியாக சண்டைக் காட்சிகளை அமைக்காமல் பலவிதமான சண்டைக் காட்சிகளை அமைத்து கடினமாக உழைத்த நடிகர் உண்டென்றால் அது மக்கள் திலகம் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். இதை ஏன் நாம் இவ்வளவு விரிவாக விளக்கமாக சொல்லியிருக்கிறோம் என்றால் அதற்கு காரணமிருக்கிறது.
இன்றைய புகழ் பெற்ற நடிகர்களின் திரைப்படங்களை பார்த்தீர்களென்றால் அனைத்து படங்களுமே ஒரே மாதிரியாக வெறும் கைகளால் 20, 30 பேரை அடித்து வீழ்த்துவது போலவே எடுக்கப்படுகின்றன. அதுவும் பெரும்பாலும் பார்த்தோமேயானால் அவர்கள் அனைவரின் கைகளிலும் ஆயுதமிருக்கும். ஹீரோ வெறும் கைகளால் அவர்களை அநாயசமாக அடித்து வீழ்த்துவார். பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் இவ்வாறே
எடுக்கப்படுகின்றன. இதில் இவர்கள் என்ன உழைத்து விடப்போகிறார். விதவிதமான சண்டைக்காட்சிகள் அமைத்து படம் பார்க்கும் இரசிகர்களுக்கு மனநிறைவை தரவேண்டும் என்பதைப் பற்றி நடிகர்களும் சிந்திப்பதில். படம் எடுப்பவர்களும் சிந்திப்பதில்லை. நடிகர்கள் பலவிதமான சண்டைகள் அறிந்திருக்கும் ஆற்றலோடு இல்லை என்பதும் ஒரு உண்மை. அதனால் ஸ்டண்ட் மாஸ்டர் அமைக்கும் காட்சி அமைப்பில் நடித்துவிட்டு போய் கொண்டு இருக்கிறார்கள். ஆக பலவிதமான விஷயங்கள் அறிந்திருக்கும் ஆற்றலும் இல்லாமல் எவ்வித கடின உழைப்பும் இல்லாமல் எளிதில் புகழ் பெற்று விடுகிறார்கள். இது தான் இன்றைய புகழ் பெற்ற நடிகர்களின் நிலை. பெரிய அளவில் கடின உழைப்பு எதுவுமில்லாமல் டைரக்டர் சொல்கிறபடி செய்துவிட்டு எளிதில் புகழ் பெற்ற நடிகர்களாக விளங்குகிறார்கள். ஆனால், மக்கள் திலகம் இதற்கு முற்றிலும் மாறுபட்டவராக விளங்கினார் என்பதை நாம் உணர வேண்டும்.
ஆக எந்தவகையில் பார்த்தாலும் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை தான் நடிகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் தனது அற்புதமான அளவான நடிப்பை மிகையில்லாமல் மிகச்சரியாக வழங்கியதோடல்லாமல், தனது
கொண்டு அனைத்தும் முழுமைப் பெற்ற மகா நடிகனாக மக்கள் திலகம் ஒருவரே இருக்க முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
பெரும்பாலும் அன்றிலிருந்து இன்றுவரை நடிகர்கள் என்பவர்கள் நடிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், நடிகராக பெயரெடுத்த அறியப்பட்ட ஒருவர் திரைத்துறையில் நவரச நடிப்பையும், அற்புதமாகவும், அளவாகவும், அருமையாகவும் வழங்கி சிறந்த நடிகராக இருந்ததோடு அல்லாமல் திரை நுணுக்கங்கள் அனைத்தும் கற்று, அதில் மிக்க ஞானம் பெற்று தன்படங்களில் வெறும் நடிகனாக நடிப்பை மட்டும் வழங்காமல் அப்படத்தின் ஏனைய பிரிவுகளிலும் தன் ஆற்றல் மிக்க அறிவின் துணை கொண்டு கவனம் செலுத்தி கடுமையாக உழைத்து அப்படங்களை வசூல் சாதனை புரியும் பெரும் வெற்றிப் படங்களாக்கி பெரும்பான்மையான மக்களை கவர்ந்து அன்றும், இன்றும் மக்களை தன்பால் ஈர்த்து ஒரு முழுமையான நடிகராக விளங்கியவர் என்றால் அது மக்கள் திலகம் ஒருவர் மட்டுமே என்பதே உண்மை.
எனவே, மக்கள் திலகத்தை சிறந்த நடிகர் என்பதற்கும் பல படிகள் மேலே ஆற்றல் மிக்க அறிவு நுணுக்கத்தால் அத் திரைப்படத்தின் சென்று மகாநடிகன் என்று நாம் அனைத்து அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சொல்வதில் மறுக்க முடியாத நியாயம் கடின உழைப்பை தந்து அப்படத்தை வெற்றி படமாக்கி அதன் இருப்பதை மனசாட்சி உள்ளவர்கள் வெற்றியில் பெரும்பங்கு தன்னுடையதாக இருக்கும்படி மறுக்க முடியாது என்பதும் உண்மை. செய்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரும் நடிகர்கள் பலர் இருக்கலாம். சிறந்த நடிகர்கள் சிலர் இருக்கலாம். ஆனால், மகா நடிகனாக மக்கள் திலகம் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும். மக்கள் திலகம் ஒரு மகத்தான மகா நடிகன் என்பதை வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள் என்றே நாம் எண்ணுகிறோம். ஆம்! மக்கள் திலகம் ஒரு மகத்தான மகா நடிகன்.
சாதனையாளராக விளங்கிய ஒரே நடிகர் மக்கள் திலகமாவார். மேலும், நாம் கூறியவற்றை வைத்துப் பார்க்கும்போது சிறந்த நடிகர் என்கின்ற சிறிய வட்டத்திற்குள் அவரை அடக்க முடியாது என்பதையும் அதையும் தாண்டி அவர் ஒரு மகா நடிகர் என்பதையும் வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நாம் எண்ணுகிறோம். அதனாலே தான் அவரது சிறந்த நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, திரை ஆற்றல், கடின உழைப்பு இவற்றைப் பற்றியும் கூறியிருக்கிறோம். அதோடு அந்நாளைய புகழ்பெற்ற பிற நடிகர்களிடமிருந்தும் சரி, இந்நாளைய புகழ்பெற்ற பிற நடிகர்களிடமிருந்தும் சரி மக்கள் திலகம் எவ்வாறு மாறுபடுகிறார் என்பதையும் வாசகர்கள் உணர வேண்டும் என்பதும் நமது எண்ணமாகும். நடிப்பு திறமை கொண்ட சிறந்த நடிகர்கள் பலர் இருக்கலாம். அற்புத நடிப்பு, அதீத ஆற்றல், அபார உழைப்பு இவற்றைக்
மகா நடிகனாக அவர் பெயர் என்றும் நிலைக்கட்டும் மக்கள் திலகமாக அவர் பெயர் என்றும் வாழட்டும்..
💐🙏💐💐💐🙏🙏✌️✌️✌️✌️✌️💐🙏🙏
வாழ்க தலைவர் எம்ஜிஆர்
(தொடர் 7)






















