• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆர் நடத்திய கலைவாணர் - ஆர்.எம். வீ. இல்ல திருமணம் !

சினிமா

ஊருக்கு உழைப்பவன், என் அண்ணன், ஒரு தாய் மக்கள், உத்தமபுத்திரன், அமரதீபம், கல்யாண பரிசு (தேசிய விருது பெற்றது) உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தவர் வீனஸ் பிக்சர்ஸ் திரு. கோவிந்தராஜன். இவர் டி.ஏ. பட்டம்மாள் அவர்களை (கலைவாணரின் மைத்துனி, டி.ஏ.மதுரம் அவர்களின் சகோதரி) மணந்து கொண்டவர். இவர்களது மகன் சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன். இவர் சத்யா மூவிஸ் படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்தவர். இவர் திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மருமகனும் கூட.

ஆர்.எம்.வீ. அவர்கள் எம்ஜிஆர் தலைமையிலான அரசின் அமைச்சரான சமயம், சத்யா மூவீஎஸ் தயாரிப்பில் உருவான 'ராணுவ வீரன்' முதல் 'பணக்காரன்' வரை படங்களின் தயாரிப்பு பணிகளை கவனித்து கொண்டவர்.

திரு. தியாகராஜன் - செல்வி திருமண நிச்சயதார்த்தம் ஆர்.எம்.வீ.யின் இல்லத்தில் நடந்த போது மணமகள் சார்பாக முதல்வர் எம்.ஜி.ஆரும், மணமகன் சார்பாக சிவாஜிகணேசனும் பங்கேற்றனர். இந்த அபூர்வ சந்திப்பு புகைப்படங்கள் 'இதயக்கனி' நடத்திய புகைப்படக் கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. 

Devaraj Andrews
 

Leave a Reply