திருவிளையாடல் 62 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது
சினிமா
சிவாஜி கணேசனும், சாவித்ரி அவர்களும் கடவுள்களான பரமசிவன் -பார்வதியை கண் முன் காட்டியிருப்பார்கள்.சிவாஜி அவர்களையும் தாண்டி நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார் நாகேஷ். போட்டியில் வெற்றி பெற்று பொற்கிழியை பெற வேண்டும் என்ற அவசரத்தை உடல் மொழியிலும், வறுமையின் பிடியில் இருக்கும் புலவனின் உணர்வுகளை முகத்திலும் காட்டி தருமி கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் நாகேஷ்.
சிவாஜியும் நாகேஷ் இருவரும் பேசி நடிக்கும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய காட்சியாக பார்க்கப்படுகிறது.திமிர் பிடித்த பாகவதராக பாலையா சிறப்பான நடிப்பை தந்திருப்பார்.படத்தின் பாடல்கள், நடிப்பு, கே. வி. மஹாதேவனின் இசை என அனைத்தும் மிக சரியான விகிதத்தில் கலந்து சிறந்த படாமாக இருக்கும் திருவிளையாடல். திருவிளையாடல் படத்தின் வசனங்கள் ஒலி பெருக்கியில் ஒலிக்காத ஊர் கோவில் திருவிழாக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் வசனங்கள் பட்டி தொட்டி வரை செல்வாக்கு பெற்றவை.
இப்படத்தின் காட்சிகளை ரசிப்பது போலவே வசனங்களும் மக்களால் கொண்டாடப்படுகின்றன.
திருவிளையாடல் படத்தின் பாதிப்பால் பல்வேறு பக்திப் படங்கள் 1967 க்குப் பிறகு வரத் துவங்கின.திருவிளையாடல் வெற்றிக்கு பின்பு சிவாஜி அவர்கள் திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற பக்தி படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்களே.
மேற்கூறிய சிவாஜி நடித்த படங்கள் மட்டுமில்லாது பின்னாட்களில் வெளியான நவக் கிரக நாயகி, சமயபுரத் தாளே சாட்சி,கை கொடுப்பாள் கற்பாகாம்பாள், ராகவேந்திரா உட்பட பல படங்கள் உருவானதில் திருவிளையாடல் படம் பெற்ற வெற்றியின் பாதிப்பு இருக்கிறது. நமது தமிழ்நாடு மாநிலமும், தமிழ் சினிமாவும் பகுத்தறிவு மற்றும் பக்தி இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் சிறந்த களமாக இருக்கிறது என்பதற்கு திருவிளையாடல் போன்ற படங்களே சாட்சி.
தருமி கதாபாத்திரத் தையும், படத்தில் ஏ. பி. நாகராஜன்அவர்கள் நக்கீரனாக நடித்து பேசிய நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற பாண்டிய மன்னனின் தர்பார் காட்சிகளையும் நினைவில் கொண்டு பேசிச் செல்வார்கள்.
. திருவிளையாடல் மறக்க முடியாத சினிமா அல்ல என்றும் மனதில் நிற்கும் காவியம்.
Kalimuthu Raj























