Donald Bradman தொப்பி ப்ரும் தொகைக்கு ஏலம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டோனல்ட் பிராட்மன் (Donald Bradman) அணிந்திருந்த தொப்பி 319,000 டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
வரியைச் சேர்த்து அதன் மொத்த விலை சுமார் 370,000 டாலர். பிராட்மன் 2001ஆம் ஆண்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 92.
1947, 1948 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தில் பிராட்மான் அந்தத் தொப்பியைப் பெற்றார்.
பிராட்மான் அந்தத் தொப்பியை இந்தியக் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷிரிரங்கா வாசுதேவ் 'ரங்கா' சொஹோனியிடம் (Sriranga Wasudev 'Ranga' Sohoni) கொடுத்தார்.
அந்தத் தொப்பியில் 'D.G. Bradman', 'S.W. Sohoni' என இருவரின் பெயர்களும் உள்ளன.























