• Welcome to TamilsGuide
செய்திகள் 1

95 வயது மூதாட்டியை கட்டி வைத்து மிரட்டல்- கடவுள் போல வந்து காப்பாற்றிய நண்பி 

இங்கிலாந்தில் (Salford ) சால்ஃபோர்டில் உள்ள ( Little Hulton) லிட்டில் ஹால்டன் பகுதியில் 95 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் ஒருவர் கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜன்னல்களை சுத்தம் செய்து தருவதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், மூதாட்டியை கட்டிவைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, மூதாட்டியின் தோழி அந்த நேரத்தில் அங்கு வந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த நபரைத் தேடி வரும் காவல்துறையினர், பொதுமக்களிடம் ஆதாரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் எந்தப் பொருளும் திருடப்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட குற்றவாளியைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள CCTV மற்றும் பிற கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.   
 

Leave a Reply