• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போன் கூட எடுக்க மாட்டார்கள் - பாலிவுட் அனுபவத்தை கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்

சினிமா

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கன்னடத்தில் வெளிவந்த Gilli திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடிக்க தொடங்கி இன்று தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இந்தியில் வெளிவந்த De De Pyaar De 2 படத்தில் நடித்திருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானபோது சந்தித்த விஷயங்களை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங். "நான் பாலிவுட்டில் அறிமுகமானபோது என்னை ஒரு புதிய நடிகையாகதான் பார்த்தார்கள். நடிகர்கள், இயக்குநர்களுக்கு போன் பண்ணினால் கூட எடுக்க மாட்டார்கள். ஒரு படத்தின் ஆடிஷனுக்காக அலுவலகத்தில் மணிக்கணக்கில் நான் காத்திருந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு மன உறுதியை தந்தது" என கூறியுள்ளார். 
 

Leave a Reply