இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு
இலங்கை
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் அக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாம் நாடி நிற்கிறோம் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தினோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.























