• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் நேர்ந்த விபத்து - 3 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும், பனிப்பொழிவு காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

கடும் பனிப்பொழிவின்போது அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் - லிட்ச்னா சாலை சந்திப்பில் நேற்று வாகன விபத்து ஏற்பட்டது.

அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் மோதின. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடும் பனிப்பொழிவு, வெளிச்சமின்மை , பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் பிரேக் செயல்படாமல் வழுக்கி செல்லுதல் காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply