மத்திய கிழக்கில் பதற்றம் - இஸ்ரேல், UAE, சவுதிக்கு சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்
எயார் பிரான்ஸ்(Air France), லுப்தன்சா(Lufthansa), யுனைடெட் எயார்வைஸ்(United Airways) மற்றும் கனடா உள்ளிட்ட சர்வதேச வானூர்தி நிறுவனங்கள், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான வானூர்திகளை நிறுத்தியுள்ளன.
ஈரானுக்கு போர் கப்பல் அனுப்பப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான வானூர்திகளை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





















