புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம்
இலங்கை
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று கூடிய அந்தக் குழுவினர், அவ்விடத்திலிருந்து கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியவாறு ஹோமாகம பிரதேச சபை வரை ஊர்வலமாக வந்ததோடு, சபை அமர்வு மண்டபத்திற்குள்ளும் சென்று அங்கும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.























