• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்தல் குறித்த ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

இலங்கை

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புத்தரின் புனித சின்னங்களின் கண்காட்சி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஜனவரி 21 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரச அனுசரணையுடன் நடைபெறும் புனித புத்தர் நினைவுச்சின்ன கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை மீளாய்வுகளை செய்வதற்கும், விகாரை வளாகத்தை ஆய்வு செய்வதற்கும் கொழும்பு, கங்காராமை விகாரைக்கு நேற்று (18) விஜயம் செய்த போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இதன்போது ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அமைச்சர்.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் புனித சின்னங்களை வணங்குவதற்கான வாய்ப்பை இலங்கை மக்களுக்கு வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான யோசனையை முன்மொழிந்தார்.

அந்த நேரத்தில், இலங்கை மக்கள் நினைவுச்சின்னங்களுக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி திசாநாயக்க கேட்டுக் கொண்டார். 

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பிரதமர் இந்த வாய்ப்பை வழங்க ஒப்புக்கொண்டார்.

சுதந்திர தினத்திற்குப் பின்னர் கங்காராமை விகாரையில் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சி தொடங்கும்.

இதனை ஏழு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு இது ஒரு சிறப்பு வாய்ப்பாக இருக்கும்.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் இந்த ஆசீர்வாதம் மிகவும் முக்கியமானது, இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பின்னரே கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply