• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோ பொலிஸ் அதிகாரி மீது திருட்டு குற்றச்சாட்டு

கனடா

கடந்த ஆண்டு நகர மையத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட வங்கி அட்டைகள் உள்ளிட்ட சொத்துக்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, டொராண்டோ பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் மாதத்தில் பல தடவைகளில் இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

52வது பிரிவுக்கு (52 Division) கொண்டு வரப்பட்ட பொருட்களை பதிவு செய்யாமல், அந்த அதிகாரி அவற்றை தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்டதாகப் புகார் செய்யப்பட்டிருந்த பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்களில் அரசு வழங்கிய அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகள் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிள் டெரக் மெக்கார்மிக் கைது செய்யப்பட்டு, 5,000 டாலருக்குக் குறைவான மதிப்பிலான திருட்டு குற்றச்சாட்டில் நான்கு பிரிவுகள், நம்பிக்கை மீறல் மற்றும் நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளாக பொலிஸ் சேவையில் பணியாற்றி வந்த மெக்கார்மிக், 52வது பிரிவில் பணியமர்த்தப்பட்டிருந்தார். தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply