• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

இலங்கை

கல்முனை,மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்  ஹக்கீம் நேற்று சென்று பார்வையிட்டார்.

மாளிகைக்காடு மையவாடி அமைந்திருந்த பிரதேசம் கடல் அரிப்புபினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதையும்  அவதானித்ததுடன்  பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் உரையாடியதோடு அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தார்.

இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply