• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கை

மன்னார் பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர்.

நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் காணாமல் போயிருந்த ஒரு இளைஞனின்  சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை,வசந்தபுரம்,உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply