விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை தந்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பின்புலத்தில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உந்துதலுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இதனை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
கரையோர பாதுகாப்பு கட்டளைச்சட்டமானது வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினரது பின்புலத்துடன் பாய்ந்தமையினாலேயே குறித்த கைதானது இடம்பெற்றது தெட்டத்தெளிவாக புலப்படுவதாகவும் தெரிவித்தார்.























