தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் வருடாந்த பொதுக்கூட்டம்
இலங்கை
தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான அமர்வாக, நேற்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
அமர்வின் போது பள்ளிவாசலின் வரவு–செலவு கணக்கு விவரங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களும், வாத–பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, அமர்வின் இறுதிப்பகுதியில் நிர்வாக சபை பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில், கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாக உறுப்பினர்களில் 14 பேரின் பெரும்பான்மையான ஆதரவுடன், அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி அல்-ஹாபிழ் எம்.எம்.சிராஜுதீன் நஜாஹி அவர்கள் புதிய நம்பிக்கையாளர் சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், உப தலைவராக அல் ஹாஜ் முஹம்மட் பாரிஸ், செயலாளராக அல் ஹாஜ் மலிக் ஷாஹ், உப செயலாளராக அல் ஹாஜ் ருபைக், பொருளாளராக மௌலவி அல்-ஹாபிழ் ஸல்மான் பாரிஸ் நஜாஹி, உப பொருளாளராக அல் ஹாஜ் நஸ்ருல் இஸ்லாம் போன்றவர்கள் புதிய நிர்வாக சபை பதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனுடன், பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு ஆலோசகர்களாக ஹாஜியானி ரொசானா அபூ ஸாலிஹ் மற்றும் அல் ஹாஜ் ஜுனைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வாழ்த்துகளையும், எதிர்கால பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர்.























