ஹம்பாந்தோட்டை துறைமுகம் பொருட்கள் சேவையில் கடந்த ஆண்டில் 175% வளர்ச்சி
இலங்கை
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் பொருட்கள் சேவை ஏற்றுமதியில் 175% அதிகரிப்பை ஏற்படுத்தி 8.24 மில்லியன் மெட்ரிக் தொன்களை கையாண்டதாகக் கூறுகிறது.
இந்த அளவு 2024 ஆம் ஆண்டில் 3.0 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருந்தது.
உலகளாவிய துறைமுகத் துறை எதிர்கொண்ட மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றாக 2025 ஆம் ஆண்டு இருந்தபோதிலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எங்கள் வேகத்தை கொள்கலன்கள் தான் அதிகரித்தன: ஒரே வருடத்தில் 53,170 கொள்கலன்களில் இருந்து 428,036 கொள்களன்களாக அளவு உயர்ந்தது, இது ஒரு முக்கிய கொள்கலன் நுழைவாயிலாக எங்கள் விரைவான எழுச்சியைக் குறிக்கின்றது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதேவேளை, உலகளாவிய சீர்குலைவு மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், இந்த செயல்திறன் அதன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, அதன் செயல்பாடுகளின் நெகிழ்வுத்தன்மை, அதன் சந்தைப்படுத்தல் முயற்சிகளின் வலிமை மற்றும் அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் க்யூ கூறினார்.





















