தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்
இலங்கை
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் இன்றுகாலை உணவுப் வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
தகவலின்படி, வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்தபோது, அதனை மற்றொரு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லும் போதே, இழுத்துச் சென்ற வண்டியின் முன்சக்கரம் உடைந்து தடம் புரண்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்த சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.























