அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மீளாய்வினை பற்றி விவாதிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
மேலும் ஒப்புதல் வழங்குவதற்காக IMF நிர்வாகக் குழு டிசம்பர் 15 அன்று முதலில் கூட திட்டமிடப்பட்டது.
எனினும், விரைவான நிதியுதவிக்கான இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மீளாய்வின் முடிவில் நாடு சுமார் 358 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்று IMF குறிப்பிட்டுள்ளது.























