• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனவரி முதல் எட்டு நாட்களில் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.

SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் – இது மொத்த வருகையில் 17.0% ஆகும். 

மேலும், இந்த ஆண்டின் முதல் சில நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,425 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பேரும், ஜெர்மனியிலிருந்து 5,306 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 3,285 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2025 ஜனவரியில் மொத்தம் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தனர்.

மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக 2,362,521 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply