வெனிசுவேலாவின் ஜனாதிபதி நானே - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' இல் பகிந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் அவரது பெயருக்குக் கீழே "வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி" (Acting President of Venezuela) என்ற பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா மீது பாரிய தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தன.
அவர்கள் தற்போது நியூயோர்க்கிற்கு கொண்டு வரப்பட்டு, போதைப்பொருள் பயங்கரவாதச் சதி குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து "வெனிசுவேலாவில் முறையான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவே அந்நாட்டை வழிநடத்தும்" என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், அது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி தான என டிரம்ப் குறிப்பிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.





















