பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
இலங்கை
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வாக அரச மற்றும் தனியார் துறையினரையும் உள்ளடக்கிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறையில் இடம்பெற்றன.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை அன்டிய பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் குவாஷி நீதிபதி எம்.எல்.தாஸீம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஆர். ஆஷிக் முஹம்மட், எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.சீ.எம்.நயிம், ஹாதிக் இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் யூ.எஸ்.எம்.சதாத், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





















