• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினம் அனுஸ்டிப்பு

இலங்கை

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினநிகழ்வு, வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள அவரது திருவுருவச்சிலையில், இன்று காலை இடம்பெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும், வவுனியா மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, குறித்த நிகழ்வில் அவரது திருவுருவசிலைக்கு, மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழ்மணி அகளங்கனாலும், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவ, மாணவிகளாலும் சுவாமி விவேகானந்தர்  தொடர்பான நினைவு பேருரைகளை ஆற்றியிருந்தனர்.

வவுனியா மாநகர ஆணையாளர் மே.சாந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் ப.சத்தியநாதன் மற்றும் உறுப்பினர்கள், மாநகரசபை செயலாளர் அ.பாலகிருபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள்,  சமூக ஆர்வலர்கள், பொது மக்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply