• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

கனடா

 கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வேகம்கொண்ட காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் மழையுடனும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் உள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஒரு குளிர் காற்றழுத்த முனை பிரதேசத்தை கடந்து செல்லும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பலத்த காற்று வீசும் சூழ்நிலை உருவாகி, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை காற்று வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாலை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொராண்டோவில் இன்று வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என , கனடா சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்த வானிலை அமைப்பின் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீர் நீர்மட்ட மாற்றங்கள், வேகமான மற்றும் வலிமையான நீரோட்டம், நிலையற்ற கரைகள் மற்றும் ஆபத்தான பனிநிலை உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், டொராண்டோ பெரும்பாக பகுதி மக்கள் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகிலுள்ள வழுக்கையான கரைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

Leave a Reply