சென்னை சத்யம் தியேட்டரில் பராசக்தி படம் பார்க்க வந்த ஸ்ரீலீலா, ஷாலினி அஜித்குமார்!
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா , ஷாலினி அஜித்குமார் ஆகியோர் சென்னை சத்யம் தியேட்டரில் பராசக்தி படத்தை பார்க்க வந்தனர். அண்மையில் மலேசியாவில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீலீலா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.






















