தமிழ் மீது கொண்ட பேரன்புடன்- ஜி.வி.பிரகாஷ் பதிவு
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகுகிறது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'பராசக்தி' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாவதையொட்டி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்… தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம் என்று கூறியுள்ளார்.























