நான் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகை - ஸ்ரீலீலா
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றது. அப்போது அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.
இந்நிலையில் பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலீலா நடிகர் அஜித்குமாரின் குறித்து பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, "நான் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகை. அவர் அற்புதமான மனிதர். எனக்கும் ரேஸிங்கில் ஆர்வம் உண்டு'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஏகே 64 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.























