• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து

இலங்கை

இன்று (07) நண்பகல் நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது விமானத்தில் ஒரு சிலர் இருந்ததாகவும் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.
 

Leave a Reply