சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது
இலங்கை
இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்குபற்றுடலுடன் இச்சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.
இவ் பரிசோதனையில் நுளம்பு பெருக்கத்துக்கு சாதுவான இடங்கள் உடன் சீர் செய்யப்பட்டதுடன்.நுளம்பு குடம்பிகள் காணப்படும் இடங்கள் உடன் அழிக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்ய சிவப்பு அறிவித்தல் மூலம் இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
சீர் செய்ய தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.






















