நுவரெலியா விமான விபத்து - சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அறிக்கை
இலங்கை
நுவரெலியாவின் கிரிகோரி ஏரியில் செஸ்னா 208 கேரவன் ஆம்பிபியன் விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சினமன் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் பதிவு எண் 4R-CAE கொண்ட செஸ்னா 208 கேரவன் ஆம்பிபியன் விமானம், ஜனவரி 07 அன்று (இன்று) நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரிக்கு இயக்கப்படும் போது ஒரு விபத்தில் சிக்கியது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
விபத்தின் போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.
விபத்தினை அடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் உடனடியாக ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டது.






















