ஆழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் 'ஆழி' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் சரத்குமார் தாடியுடன் கரடுமுரடான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
























