முத்து படக் காட்சியை பதிவிட்டு 2026 புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
சினிமா
2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு பிறந்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு அன்று ஆண்டுதோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறுவது வழக்கம். சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் 'முத்து' படக் காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
"நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, 'சிவா'-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!" என்ற 'முத்து' திரைப்படக் காட்சியை பதிவிட்டு ரஜினிகாந்த் 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.























