• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5.25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு

இலங்கை

ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒரு தம்பதியினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதியானது 5.25 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (01) அதிகாலை 12.45 மணிக்கு டுபாயில் இருந்து விமான நிலையத்துக்கு வந்தாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 175 அட்டைப் பெட்டிகளில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 35,000 வெளிநாட்டு சிகரெட் குச்சுகள் மீட்கப்பட்டன. 

கைது செய்யப்பட்ட தம்பதியினர், 24 வயதுடையவர்கள் மற்றும் கொழும்பில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தற்சமயம் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply