• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை

இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊழியர் சேமலாப உறுப்புரிமையை உற்பத்திதிறன் மிக்கதாக மாற்றுவதே இதன்பிரதான நோக்கமாகும் என தொழில் அமைச்சரும் பொருளாதார பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

தொழில் அமைச்சரும் பொருளாதார பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்ணான்டோ தலைமையில் தொழில் அமைச்சின் செயலகத்தில் இன்று நிகழ்வு இடம்பெற்றது.

டிஜிட்டல் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான மென்பொருள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தொழில் அமைச்சரும் பொருளாதார பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்ணான்டோ ,

டிஜிட்டல் பொருளாதாரம் மிக முக்கியமான துறையாகும்.

இதனூடாக முழு அரச சேவையினையும் ஒன்றிணைப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

உயர் தொழினுட்ப சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாகவே ஊழியர் சேமலாப நிதியம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
எமது அரசாங்கம் ஆட்சிபொறுப்பேற்றதில் இருந்து டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அனைத்து அரச சேவைகளையும் தனித்தனியாக ஒன்லைன் கட்டமைப்பில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது பாரியதொரு பணியாகும்.

அதனை ஒரு தடவையில் நடைமுறைப்படுத்த முடியாது ஊழியர் சேமலாப உறுப்புரிமையை உற்பத்திதிறன்மிக்கதாக மாற்றுவதே இதன்பிரதான நோக்கமாகும்.

இந்த திட்டத்தினை விரிவுபடுத்துவதற்காகவே தற்போது ஒன்லைன் ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தகவல் பரிமாற்ற சேவையில் சிக்கல் காணப்படுகிறது.

பொதுவான தகவல்களை மக்களுக்கு நாம் அறியக்கூடிய வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.
அதற்கு பல இடையூறுகளும் எழுந்துள்ளன.

ஒரு சிலர் டிஜிட்டல்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர்.

அந்த கலசாரத்தினை மாற்றியமைப்பதற்கே நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply