90 வயதிலும் ஹெல்தியாக இருக்க என்ன காரணம் - வெண்ணிற ஆடை மூர்த்தி ஓபன் டாக்
சினிமா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.
அவரது நடிப்பே ஒரு தனி விதமாக இருக்கும், படங்களை தாண்டி சின்னத்திரையிலும் பெரிய அளவில் கலக்கியுள்ளார். 90 வயதாகும் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்டை கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அவர், நான் வலிமையோடு இருக்கிறேன் என சொல்லவில்லை, ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறேன். முதுமையின் தாக்கங்கள் எனக்கும் இருக்கிறது.
உடலளவில் முதுகு வலி இருக்கிறது, நடக்கும்போது கொஞ்சம் மெதுவாக நடப்பேன். ஆனாலும் நான் நடக்கும்போது யாரும் என்னை பிடித்துக் கொள்ளக்கூடாது, நானே நடந்துவிடுவேன்.
சாப்பாடு பொறுத்தவரை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன், வீட்டில் செய்யும் உணவுகளே என் சாய்ஸ். ஹோட்டல் சென்றால் கூட, ஃபேன்சி உணவுகள் சாப்பிடவே மாட்டேன் என்றார்.






















