ரிவால்வர் ரீட்டா படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
சினிமா
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.





















