• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

இலங்கை

சட்டவிரோதமான முறையில்‍ வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் போதைப்பொருள் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதிகாரிகள் ​​210 அட்டைப் பெட்டிகளில் 42,000 சிகரெட் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர் அவிசாவளை வீதி, அப்பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply