2025 கிறிஸ்துமஸ் - புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட இளவரசர் வில்லியம்–கேதரின் தம்பதி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேதரின் ஆகியோர் தங்களின் 2025 கிறிஸ்துமஸ் அட்டைக்காக புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இது நோர்ஃபோக்கில் ஏப்ரல் மாதம் புகைப்படக் கலைஞர் ஜோஷ் ஷின்னர் எடுத்த இந்த படத்தில், வில்லியம்–கேதரின் தம்பதியும், அவர்களின் குழந்தைகள் ஜோர்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோர் இயற்கை சூழலில் இணைந்து அமர்ந்துள்ளனர்.
இந்த இயல்பான, அன்பான புகைப்படம் அரச குடும்பத்தின் நவீன மற்றும் எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்கிறது.
புற்றுநோய் மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு கேதரின் மெதுவாக பொதுவாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையையும் இது பிரதிபலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.























