• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பு

கனடா

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லா விகிதமும் ஒக்டோபரில் இருந்த 6.9 வீதத்தில் இலிருந்து நவம்பரில் 6.5 வீதமாக குறைந்துள்ளது.

இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply