பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்
இலங்கை
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த லொரி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வெள்ளவத்தை திசையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த லொறி மோட்டார் வாகனங்களுடன் மோதிய பின்னர், அந்த லொறி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















