• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாளத்தில் விமான சேவை பாதிப்பு - அவதியடைந்த பயணிகள்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில்விமான நிலைய ஓடுதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுதளத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.

விமான நிலைய ஓடுதளம் வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a Reply