ரூம் போட்டு பேசுங்கள் - கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கஸ்தூரி சர்ச்சை பேச்சு
சினிமா
மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் திமுக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த நடிகை கஸ்தூரி, பெண்கள் நேரங்கெட்ட நேரத்தில் வெளியில் சுற்றக்கூடாது; எவ்வளவோ பாதுகாப்பான இடங்கள் இருக்கும்போது வெளியில் ஏன் செல்ல வேண்டும்; பெண் மட்டுமல்ல, ஒரு ஆண் கூட இரவில் வெளியில் சுற்றக்கூடாது. ஒருவேளை பேசியே ஆக வேண்டும் என நினைத்தால் ரூம் போட்டு பேசுங்கள்" என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.























