மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 66,150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இலங்கை
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
இதேவேளை, பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமுல் படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.






















