என்னை பற்றி பெருமைப்படுவீர்கள் விஜய்..! The Girl Friend - ராஷ்மிகா நெகிழ்ச்சி பதிவு
சினிமா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா படத்தை தொடர்ந்து, தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.
அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், தி கேர்ள் பிரண்ட் திரைப்படத்தின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில்," தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம், படக்குழுவினர் சக்திவாய்ந்த ஒன்று.. முக்கியமான ஒன்று உருவாக்கியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒன்று.
அனைத்து நடிகர்களின் நடிப்பும் டாப் கிளாஸ் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராகுலஅ, அனு இமானுவேல் ஆகியோர் ஒரு தாக்கத்தை உருவாக்கப் போகிறார்கள்.
நாளை நாம் அனைவரும் தி கேர்ள் பிரண்ட் படத்துடன் நடப்பதைப் பார்ப்போம். திரையரங்குகளில் சென்று அதை அனுபவியுங்கள்
அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நிறைய அன்பும் பெரிய அணைப்புகளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தேவரகொண்டாவின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிவில்," இது சக்திவாய்ந்த ஒன்று. இது முக்கியமான ஒன்று. இதை ஜீரணிக்க கடினமாக இருக்கும் - நன்றாகச் சொன்னீர்கள். நன்றி..!
தேவரகொண்டா நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் மறைமுக ஆதரவாளராக இருந்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் என்னைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்!
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது























