விக்கி - கத்ரீனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது- குவியும் வாழ்த்துகள்
சினிமா
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் இணைந்து நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை தங்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், மாதுரி தீட்சித், பிபாஷா பாசு உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






















