• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Bigg Boss Season 9- இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்? - வெளியான புதிய தகவல்

சினிமா

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த வார எவிக்ஷன் பட்டியலில் கலையரசன் , அரோரா சின்கிளேர், பார்வதி, கம்ருதீன், கானா வினோத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 4 வாரங்களை நெருங்கிய நிலையில் இந்த வாரம் கலையரசன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply