• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹெல்பத்தரவுடன் தொடர்புடைய நடிகைகளிடம் விசாரணை

இலங்கை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக்குழு பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (31) நீதிமன்றத்தில் அறிவித்தது.

குறித்த நடிகைகள் கெஹெல்பத்தர பத்மேயுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணச் சலவை அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Reply